அலுவலக ஆண்டுவிழா, ஒரு மாலை வேளை அது..

நான் வேலை செய்யும் தனியார்  அலுவலகத்தின் கடந்த ஆண்டு விழாவின் போது.....



ஒரு மாலை வேளை அது, சென்னை, ப.ம.சாலை, தனியார் கேளிக்கை அமைப்பிற்கு சொந்த மைதானத்தில்...... வழக்கம்போல், அழகான இளம்பெண்கள் (சண்டைக்கு வரக்கூடாது) வரவேற்க, மற்ற நண்பர்கள் அரட்டையும் கேளியுமாய் அங்குமிங்கும் தம் கால்களையும் கண்களையும் ஓட்டமிட, இன்னும் சிலரோ 'செல்பி' எனும் தங்களைத் தாமே படம்பிடித்து கொண்டு களித்து இருக்க ஆரம்பமானது, அலுவலக ஆண்டுவிழா.....
விழாவின் நெறியாளர் ஒரு நான்கு கேள்விகளை பொதுவாய் கேட்டு, அதன் பதில்களுக்கு ஒத்த நபர்களை, தேர்ந்தெடுத்து, குழுவிற்கு ஒரு முன்னிருத்தி ஆள் என செய்யலானார்.. அவ்வகையில் ஒரு வினா "எவரொருவர், உங்கள் அலுவலகத்தில் *சின்சியர் சிகாமணி*யாக, வேலை செய்வது?" என்று கேட்க... போதுமே நண்பர்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்... நண்பன் ராஜ்குமார் (என் ஊரைச் சேர்ந்தவன் வேறு, பாசத்தை வெளிப்படுத்தனும்னு முடிவு கண்டதுபோல்), உள்ளிருந்து "அங்கு", "அங்குராஜ்" எனக் கத்த, மற்றவர்களும் ஒன்றாய் "அங்கு", "அங்கு" எனக்கூவ, ஒட்டு மொத்த கூட்டத்தின் விழிகளும் என்மேல் விழுந்தது.....
எனக்கோ எங்கே நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணிவிடுவார்களோ என்று நெஞ்சோரத்தில் ஒரு கிலி.. (உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது, புரியுது, ஒத்துக்குறேன், "நானே ஒரு காமெடி பீஸ்" னு)........
என் ஊர்க்கார நண்பன் குரலால் செய்ததை, இன்னும் இரு நண்பர்கள் செயலிலே காட்ட முற்பட்டார்கள்...... போன ஜென்மத்தில் இருந்து இந்த ஜென்மம் வரை, விடாது கருப்பினைப் போன்று, என்னுடன் நட்பு பாராட்டும் இரு நண்பர்களான கிருஷ்ணா, தனா......
ஆம், அனைவரும் கக்கபுக்க என்று சிரித்திருக்க, என் நாற்காலியிலிருந்து கிளப்பப்பட்டது, என் மெய்யுடல்.....
என்னை மாட்டிவிடுகின்ற மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிற என் இரு உயிர் நண்பர்களைப் பாருங்கள்...
"பல்லு முழுக்க வாயா? இல்ல, வாயி முழுக்க பல்லா?!"னு கேக்குற அளவுக்கு, குஷியோ குஷி....
(என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு!? என்பதைப் போல்)... ஹ ஹா ஹா...

நண்பர்களிடம் களித்து இருக்கும் வேளையில், யாரும் அறியா வண்ணம், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டும், நட்பின் இனிமைகளை.... அவ்வகையில், இந்த புகைப்படம் எனக்கு ஒரு சொத்து.....  😇😇😇

No comments: