மழலையோடு ஓர் மழலையாய் அங்கு நான்...
சரியாய் ஒரு ஆண்டு இருக்கும்...அது ஒரு ரயில் பயணம்.. நீண்டதும் கூட.. அழகான மாலைப்பொழுது.. சன்னலின் ஓரம் எட்டிப்பார்த்தபடி நான்.. என்னருகே மழலைப் பேச்சு சாயம் போகாமல் பேசி அமர்ந்தபடி ஒரு சிறுமி..
அதில் ஒன்று என்னவெனில், அம்மழலைப் பேச்சில், தமிழும் மராட்டியும் கலந்திருந்தது.. சுற்றி நிறையபேர் இருக்கையிலே, அச்சிறுமி இன்னொரு மழலையான என்னிடம் (!) வந்து சிரித்துப்பேசி விளையாடி இருந்தாள்..
எனது கைப்பேசியில் 'கேம்' விளையாட வேண்டும் என்று, அவள் தாயிடம் கூறி அடம்பிடித்தாள், மழலைக்கே உரித்தான மொழியில்.. (வெற்று குறு அழுகை).. பிறகு என்ன.. சிறிது நேரத்தில் எனது கைப்பேசி அவளது கையில்.. 'கேம்' விளையாட ஆரம்பித்தாள்..
இடை இடையே அவளுக்கு ஆயிரத்தெட்டு கேள்விகள்.. ஒவ்வொன்றிற்க்கும் பதில் தரவேண்டிய கட்டாயத்தில் நான்.. பதில் சொல்லவில்லையெனில், எனது கைப்பேசியை தூக்கி வீசுவதாய் சைகைகள் புரிந்தாள்.. 'அம்மா தாயி நல்ல புள்ளைல, கொடுத்துடுமா' னு சொன்னாலும் பிரயோஜனம் இல்லை.. 'கீப்போட்டுவே' னு பதிலுக்கு மிரட்டினாள், அம்மழலை.. நான் 'சாரி' எனச்சொல்லி அவளின் மழலை விளையாட்டில் இணைந்து கொண்டேன்.. (வேறு வழி )
அவளுக்குள்ள சிறப்பு என்னவென்றால், எனது கைப்பேசியின் கடவுச்சொல் 8 இலக்க எண்களை இரண்டு முறை மட்டுமெ பார்த்திருப்பாள், நான் பயன்படுத்தும் பொழுது.. பிறகு அவளே எனது கைப்பேசி திரையைப்பூட்டி, யோசித்து, கைகளை மேலும் கீழுமாய் ஆட்டி, ஆட்காட்டி விரலை தனது முட்டுவாயில் வைத்து யோசிப்பது போல் நின்று, சரியாகவே அக்கடவுச்சொல்லையும் போட்டு, திறந்துவிட்டாள்... மெய்சிலிர்த்து ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ததப்படி நான் 'சூப்பர், வெரி குட்' னு மட்டும் சொல்லியபடி..
இப்பொழுதெல்லாம் குழந்தைங்க எல்லாம் படும் அறிவுக்கூர்மையாய், வருகிறார்கள்.. இவர்களின் அறிவுக்கான பட்டைத்தீட்டும் தேவையான பயிற்சிகளை அளிக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமுதாயமும் சீரிய கடமை கொண்டிருக்கிறோம்..
நாளைய பாரதம், இவர்களின் கைகளில்...
படத்தில் மழலையோடு ஓர் மழலையாய் அங்கு நான்...
