இதெல்லாம் அநியாயம் மக்களே!

ஏம்ப்பா.. மாநகர் பேருந்துகள்லலாம் ஆண்களுக்குனு இடம் ஒதுக்குங்கப்பா... இந்த மங்கையர்க்கரசிங்க அட்டூழியங்கள் எல்லாம் கூடிக்கிட்டே போகுது.. மனுசன் உக்காரதுக்குக்கூட இடம் கிடைக்கமாட்டிது...

அவிங்க இடத்துல உக்காந்தா மட்டும் "இது லேடிஸ் சீட்டு, எந்திரி" னு சொல்லி இடத்த புடுங்கிக்கிறாங்க...
பல ஆண்களெல்லாம் நின்னுக்குட்டு இருக்குறப்பவும், நம்மள நம்ம சீட்டுல உக்காரவிடாம, இந்த பக்கட்டும் வந்து அவுங்க உக்காந்துக்குறாங்க... சீட்டு கேட்டாலும் "இது பொது சீட்டாம்"...
இல்ல நான் தெரியாமத் தான் கேக்குறேன்... அப்போ ஆண்களுக்குனு இடம் இருக்கா இல்லையா... 

கொஞ்சமாச்சும் மனசாட்சியோட நடந்துக்கங்கடி சாரி நடந்துக்கங்க.... கடுப்பேத்துறாங்க மை லார்டு... முடியல டா சாமி....