முதியவர்களே பொதுவில் அழகு தான்! சில சமயங்களில் முதியவர்கள் பேரழகாக காட்சித் தருகிறார்கள்....ஆமாங்க....
இன்று காலை வேளையில், முதியவர் ஒருவர், ஒரு தோளில் தன் பிஞ்சு பெயரனையும், இன்னொரு தோளில் நூற்பையையும் சுமந்து கொண்டே, சாலையைக் கடந்தார்... அவனது கையிலொரு மிட்டாயையும், அன்பு முத்தம் ஒன்றை உச்சம் நெற்றியிலும் இட்டுவிட்டு, "டாடா" சொல்லிக் கிளம்பினார்.., இனிதான் உச்சக்கட்டமே....
சிறுதூரம் கடந்த முதியவர், தன் பெயரன் அழுகிறானா? வகுப்புக்குள் சென்று விட்டானா? என்று பின்னோக்கி திரும்பி பார்த்துவிட்டு, ஒரு புன்னகையை உதிர்த்தார் பாருங்கள்... கொள்ளையழகு... தன் பெயரனின் மீதுள்ள அவரது பாசத்தின் ஆழத்தினை, ஆழ்ந்து நோக்கியதால் என்னால் உணரமுடிந்தது...
இன்று கண்ட நிகழ்வு என்றாலும் , எங்க தாத்தா-வை அங்கு காணமுடிந்த ஒரு உணர்வு..... இவ்வுலகில் அவரில்லை என்கையில் வந்த மனவலி, பெருமூச்சுடன் தற்காலிகமாக களைந்தது, அலுவலகத்திற்கான பேருந்து வந்ததைக் கண்டு....
உறவுகளில் தாத்தா-பெயரன் உறவு, தாத்தாவின் முந்தைய மூன்று தலைமுறைகளையும் பெயரனின் மூன்று தலைமுறைகளையும் இணைக்கின்ற பாலம் போன்றது.....
என் தாத்தாவின் நினைவுகளோடு நான்..... இல்லை இல்லை...
என் நினைவுகளில் அவர் வாழ்கிறார் உயிராக .....
12-02-2016

No comments:
Post a Comment